திங்கள், 25 மே, 2009

தமிழ்ப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்காதது ஏன்?



இயக்குநர் வி.சி.குகநாதன்,



‘’தமிழ்ப் படங்களுக்கு ஏன் ஆஸ்கர் விருது கிடைப்பதில்லை என்கிறார்கள். ‘தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்களே எடுப்பதில்லை. அதனால்தான் கிடைப்பதில்லை’ என்று ஒருவர் சொன்னார்.

இது எவ்வளவு வேதனையான செய்தி. ஜப்பான் நாட்டில் படம் எடுத்தால், அவர்கள் ஆங்கிலப் படம் எடுப்பது இல்லை. ஜப்பான் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படத்தையே எடுப்பார்கள்.

அதேபோல் சீனாவிலும், மற்ற சில நாடுகளிலும் அந்தந்த நாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை சொல்லும் கதை கொண்ட படங்களையே எடுக்கிறார்கள். அதுபோல் இந்திய, தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்களை உருவாக்க முன்வர வேண்டும்.

தமிழ்ப் படவுலகில் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கிறது. ஆனால், நல்ல கதை, அருமையான திரைக்கதை, இவற்றுக்கெல்லாம் ஈடாக வசனம் எழுதுபவர்கள் குறைவு. ‘சொந்த புத்தி இருந்தால் கண்டுபிடி. மந்தபுத்தி இருந்தால் காப்பியடி’ என்ற மந்திரத்தைச் சொன்னவர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். நாம் சொந்தமாக யோசித்து செயல்பட வேண்டும்’’என்று பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக