
கொத்துக் கொத்தாக யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டது எத்தனை நிஜமோ… அத்தனை நிஜமானதுதான் பல்லாயிரம் தமிழர்களின் துடிதுடித்த மரணமும்கூட! இந்த மரணங்களுக்கு ஒரு நியாயமான நீதி விசாரணை கட்டாயம் தேவை. இதைச் செய்யத் தவறினால் நாட்டாமை பேசும் நாடுகள் எல்லாம் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும் என்று ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஆனந்த விகடனின் இன்றைய தலையங்கம்:விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிந்த முள்ளிவாய்க்கால் இறுதித் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள்...